×

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நல்லாத்தூர் ஊராட்சி: எம்பி, கலெக்டரிடம் கோரிக்கை

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் என எம்பி செல்வம், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரிடம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா  நல்லாத்தூர் ஊராட்சி நல்லாத்தூர் கிராமத்தில், சிமென்ட் சாலைகள் சிதிலமடைந்து உள்ளன. இந்த தெருக்களில்  புதிய சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா, எம்பி செல்வம், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.அதில், திருக்குழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் பனங்காட்டுச்சேரி, கொந்தகாரிகுப்பம், பொம்மராஜபுரம், நல்லாத்தூர் கிராமங்களில் இருளர் பகுதி உள்ளன. இங்கு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்பட   அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களுக்கு  சிமென்ட் சாலை, மழைநீர் கால்வாய், கல்வெட்டு,  நல்லாத்தூர் காலனியில் இருந்து ரேஷன் கடை வரை தார்சாலை, குடிநீர் பிரச்னையை தீர்க்க பைப்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பொம்மராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிதிலமடைந்த கட்டிடம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக, 2 தளம் கொண்ட நவீன கட்டிடம், ஆடிட்டோரியம் கட்டி முடித்து, அங்கு மேஜை, நாற்காலி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையம், இ சேவை மையம், சமுதாயக்கூடம் ஆகிய கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர், கொந்தகாரிக்குப்பம் பகுதிக்கு புதிய அங்கன்வாடி, சுற்றுச்சுவர், புதிய நீர்த்தேக்க தொட்டி, வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன்கடைக்கு  சொந்த கட்டிடம் ஆகியவை கட்டி தரவேண்டும்.பழுதடைந்த நிலையில் உள்ள  சமுதாய கூடத்தை புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.  நவீன உடற்பயிற்சி கூடம், புதிய கால்நடை மருத்துவமனை, கொந்தகாரி குப்பத்தில் இருந்து கொல்லை மேட்டு தெரு வரை ஒன்றரை கிமீ தூரத்துக்கு புதிய பைப்லைன் அமைக்க வேண்டும். செய்யூர் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ₹30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, தனி பைப்லைன் அமைத்து தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : Nallathur ,Panchayat ,Thirukkalukkunram Union , In Thirukkalukkunram Union Nallathur panchayat without basic facilities: Request to MP, Collector
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்